மாரி தொடர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடன் மாரி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாரி 2 தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாகவும், கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.


