தற்போது சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நாளை (மே-16) வெளியாக இருக்கும் மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புரமோஷன் பெற்றுள்ளார் ஈரோடு மகேஷ். இந்த படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்திற்கான நகைச்சுவை வசனங்களை ஈரோடு மகேஷ் தான் எழுதியுள்ளார். சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி இந்த தகவலை வெளியிட்டார்.
