Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை… காரணம்‌ என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகாகவி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை மியூசிக் அகாடமி டி.எம். கிருஷ்ணாவுக்கு அறிவித்தது. விருதுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்க திட்டமிடப்பட்டது.

இந்த முடிவு கர்நாடக இசை கலைஞர்களிடையே அதிர்ச்சி மற்றும் மனவேதனையை ஏற்படுத்தியது. எம்.எஸ். சுப்புலட்சுமியை விமர்சித்தவருக்கு அவரது பெயரில் விருது வழங்குவது சரியாகதோ என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கத் தடை விதித்து உத்தரவிட்டார். அதேசமயம், அந்த பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

- Advertisement -

Read more

Local News