‘லக்கி பாஸ்கர்’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்த மானசா சவுத்ரி, தற்போது தமிழில் அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிஎன்ஏ’. இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘சித்தா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நிமிஷா சஜயன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ‘லக்கி பாஸ்கர்’ பட நடிகை மானசா சவுத்ரி, இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.