Wednesday, October 30, 2024

சிறப்பு வெளியீடு என்ற புதிய ட்ரெண்ட் செட் செய்த ‘லக்கி பாஸ்கர் ‘… ரசிகர்கள் கொண்டாட்டம்! #LUCKY BASKHAR

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதிய படங்கள் வெளியீட்டு நாளில் அதிகாலை காட்சிகள் களையப்படாமல் காலை 9 மணிக்கு மட்டுமே காட்சிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சிகளை காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு 9 மணி வரை காத்திருப்பது சிரமமாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டாக பிரிமியர் காட்சிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் நேரடி தமிழ்ப் படங்களுக்கானது அல்லாமல், தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவரும் ‘லக்கி பாஸ்கர்’ படத்துடன் ஆரம்பமாகிறது. அமெரிக்காவில் நடக்கும் ‘பெய்டு பிரிமியர் காட்சிகள்’ போன்றே இங்கே இவ்வாறு நடத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை மற்றும் இரவுக் காட்சிகளாக துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படம் 11 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இந்தப் பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளது. இந்த புதிய வழக்கத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் எதிர்காலத்தில் பின்பற்றுவார்களா என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

- Advertisement -

Read more

Local News