இரவின் நிழல், டீன்ஸ் போன்ற படங்களை இயக்கிய பார்த்திபன் தற்போது மூன்று படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அடுத்ததாக ‘ஆண்டாள்’ என்ற படத்தை இயக்க இருக்கிறேன். ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா ஹீரோயினாக நடிக்கிறார். தலைப்பிலிருந்தே இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதை உணர முடிகிறது. டூரிஸ்ட் பேமிலி மாதிரி, இது பக்கா குடும்பக் கதையாக அமையும்.

அதற்கடுத்ததாக ‘ஆடியன்ஸ்சும் ஆவுடையப்பனும்’ என்ற படத்தை இயக்க இருக்கிறேன். அந்த படத்தின் முயற்சி, சிங்கிள் ஷாட் ஆகியவை பேசப்படும். விரைவில் என் மகன் ராக்கி இயக்குனராக அறிமுகமாக உள்ளான். அவன் இயக்கும் படத்தில் நானும் ஒரு வேடத்தில் நடிக்கிறேன். அதில் வடிவேலுவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அர்ஜூன் தாஸை வைத்து படம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டார். இதனால், அடுத்த மூன்று படங்களில் பார்த்திபன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.