Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் ட்ரெய்லர்-ஐ வெளியிடும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்! #SORGAVAASAL

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, சலூன் போன்ற படங்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வாழ்க்கையை ரேடியோ ஜாக்கியாக தொடங்கிய இவர், படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனித்துவமான பாணியில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்கி வருகிறார்.

சொர்கவாசல் எனும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் கதையை இயக்குநருடன் இணைந்து தமிழ்ப் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் எழுதியுள்ளனர்.

இப்படம் மத்திய சிறைச்சாலையை மையமாகக் கொண்டு, 1999 ஆம் ஆண்டில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News