71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டது. திரைப்படங்கள் அல்லாத இதர விருதுகளில் ‘லிட்டில் விங்ஸ்’ என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது.உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம் ‘லிட்டில் விங்ஸ்’. இயக்குனர் ராஜூ முருகன், திலானி ரபிந்திரன் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் நவீன். இவர் ராஜூமுருகனின் உதவி இயக்குனராக இருந்தவர். கந்தர்வனின் ‘சனிப்பிணம்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம் இது.
