கடந்த வாரம் அனுஷ்கா நடித்த காட்டி மற்றும் மவுலி தனுஜ் பிரசாந்த், ஷிவானி நகரம் உள்ளிட்டோர் நடித்த லிட்டில் ஹார்ட்ஸ் படங்கள் வெளியானது. இதில் காட்டிவை விட லிட்டில் ஹார்ட்ஸ் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

நடிகர் நானி, “லிட்டில் ஹார்ட்ஸ் ஒரு கலகலப்பான, வேடிக்கையான படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனமார ரசித்தேன். அகில், மது, காத்யாயணி—நீங்கள் எல்லாரும் என் நாளை அழகாக்கிட்டீர்கள். நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்ல மாட்டேன், ஆனா இப்போ ‘நன்றி’னு மட்டும் சொல்ல விரும்புகிறேன்” என்று தனது பாராட்டை தெரிவித்தார்.
தமிழில் டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கி தெலுங்கு திரையுலகினரிடமிருந்தும் பாராட்டு பெற்ற அபிஷன் ஜீவிந்த், “லிட்டில் ஹார்ட்ஸ் பார்த்தேன். நண்பர்கள், குடும்பத்தோடு ரசிக்க ஏற்ற அழகான, சுவாரஸ்யமான படம்” எனக் குறிப்பிட்டார். மூன்று நாட்களில் இப்படம் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளது. தினசரி வசூலும் அதிகரித்து வருகிறது.