Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மும்பை வாழ்க்கை மகிழ்ச்சியாகவே உள்ளது… மனம் திறந்த நடிகர் சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா தமிழ் மீது பற்றுள்ளவராகவும், தமிழகத்தின் மீது அதிக பாசமுள்ளவராகவும் தன்னை எப்போதும் காட்டிக் கொண்டவர். தற்போது தமிழகத்தை விட்டு வெளியேறி சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தோடு செட்டிலானார். அவருடைய மகளும், மகனும் அங்குதான் படித்து வருகிறார்கள். படப்பிடிப்புக்கு மட்டும் தமிழகத்திற்கு வந்து செல்கிறார். ஹிந்திப் படங்களில் நடிக்கவே அவர் மும்பை சென்றார் என்ற பேச்சும் வந்தது.

மும்பையில் செட்டிலானது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், ”27 ஆண்டுகள் எனக்காக என் குடும்பத்துடன் சென்னையில் இருந்தார் ஜோதிகா. ஒரு ஆணுக்குத் தேவையானது பெண்ணுக்கும் தேவை. அதை நான் தாமதமாகவே புரிந்து கொண்டேன். ஜோதிகாவும் அவருடைய குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். நமக்காக அவருடைய ஆசையை ஏன் பறிக்க வேண்டும் என்றும் யோசித்தேன்,” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, நேற்று மும்பையில் ‘கங்குவா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், சூர்யாவின் மும்பை வாழ்க்கை எப்படி உள்ளது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சூர்யா, “மும்பையில் இருப்பது சிறப்பாக உள்ளது. இந்த ஊர் என்னுடைய மாமியாரின் ஊர், இதைப் பற்றி நான் எப்படி தவறாக சொல்ல முடியும். இங்கு எனக்கு அதிகமான அன்பு கிடைக்கிறது. மும்பையில் எனது குழந்தைகள் நன்றாக செட்டில் ஆகி, பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது, இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு மகிழ்ச்சி. இங்கு நிறைய பேரை சந்திக்க முடிகிறது. சென்னையில் இருந்தால் எப்போதாவது ஒரு முறைதான் சந்திப்புகள் நடக்கும். இங்கு திரையுலகத்தைச் சேர்ந்த மற்ற துறைகளைச் சேர்ந்த பல அற்புதமான மனிதர்களைப் பார்க்க முடிகிறது,” என தனது மும்பை வாழ்க்கை பற்றி பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News