Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

LIC இல்லையாம் LIK-வாம்… வெளியான பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ First Look!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்க ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் படம் ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை சுருக்கமாக ‘எல்ஐசி’ என படக்குழுவினர் குறிப்பிட்டதால் ‘எல்ஐசி’ நிறுவனம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் படத்திற்கு ‘ப்ளூ ஸ்டோரி’ என தலைப்பு மாற்ற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று பெயரை மாற்றியுள்ளனர். அதனால், ‘எல்ஐசி’ என்று முன்பு சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட பெயரை தற்போது ‘எல்ஐகே’ என குறிப்பிடுகிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறியப்பட்டது.

இந்நஙஇன்று படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் என்பதால் படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News