இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே.ஆர். விஜயா. ரசிகர்களால் அன்புடன் ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்படும் அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சென்னை தியாகராயநகரில் வசித்து வருகிறார். உடலையும் மனதையும் இளமையோடு பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் சலூனுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பு சிகிச்சைகளை செய்து கொள்கிறார். கொண்டைக் கூந்தலுடன் காணப்படும் கே.ஆர். விஜயா தற்போது ‘மாடர்ன் லுக்’ இல் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
அவருக்கு சிகை அலங்காரம் செய்து வரும் சக்தி கூறுகையில், “நேரம் கிடைக்கும் போதெல்லாம் கே.ஆர். விஜயா கூந்தல் பராமரிப்பு சிகிச்சை செய்து கொள்வார். எங்களுடன் மிகுந்த ஆனந்தத்துடன் பேசுவார். இன்றளவும் அவரை இளமையுடன் காண்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது” என்றார்.