சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா இயக்குனராக திரையுலகில் களமிறங்கியுள்ளார். திரையுலகில் பணியாற்றும் லைட்வுமன்கள் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை அவர் ‘லீடிங் லைட்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

இதனை சூர்யாவின் நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. பல பாராட்டுகளைப் பெற்ற இந்த படம், ஆஸ்கர் குவாலிபையிங் ரன்னுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி தியேட்டரில் திரையிடப்படுகிறது.
வரும் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்கு காட்சியாக இப்படம் திரையிடப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.