Monday, February 10, 2025

வெப் தொடர் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர், பல ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘தேவாரா’ படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜான்வி கபூரை தமிழில் அறிமுகப்படுத்த பல இயக்குனர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அது வெற்றிபெறவில்லை. தற்போது, நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் தொடர் மூலம், அவர் தமிழில் தனது முதல் அறிமுகத்தை செய்கிறார்.

இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதனை பா. ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இயக்குனர் சற்குணம் இதை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News