விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள ‘வீர தீர சூரன் 2’ திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ளது. ஆனால் பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் தொடர்ந்த வழக்கினால், இன்று காலை 10.30 மணி வரை இந்த திரைப்பட வெளியீட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.
இந்த தடை ஏற்பட காரணமாக, சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளைப் பற்றிய ஒரு சிக்கல் தான் கூறப்பட்டுள்ளது. இதில் சாட்டிலைட் உரிமைக்காக தேவைப்படும் ஏழு கோடி ரூபாயை, நடிகர் விக்ரமின் சம்பள பாக்கிக்காக தருவதாக தயாரிப்பாளர் கூறியிருந்ததாக தெரிகிறது. இந்த தகவலை அறிந்த பி4யு நிறுவனம், இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டது பிறகு, விக்ரம் அந்த ஏழு கோடி ரூபாயை விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றம் இவ்வழக்கில், 7 கோடியை முதலில் இப்பட தயாரிப்பு நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், 4 வாரங்களுக்கு படம் வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இரு தரப்பினரும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.. திரைப்படம் இன்று அல்லது நாளை அல்லது வேறு தேதி மாற்றப்பட்டு ரிலீஸ் ஆகுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.