Friday, January 24, 2025

‘லால் சலாம் ‘ பட நடிகை கதாநாயகியாக நடிக்கும் 8 வசந்தலு’…. தயாரிப்பது யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்திற்குப் பிறகு, மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சன்னி தியோலின் ஜாத், நித்தின் நடித்துள்ள ராபின்ஹுட் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதனால் மட்டுமல்லாமல், “8 வசந்தலு” என்ற புதிய படத்தையும் உருவாக்குகிறது. பனீந்திர நரசெட்டி இயக்கும் இந்த படத்தில், லால் சலாம் படத்தில் நடித்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News