இந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மட்டுமின்றி, இதை ஆவணப்படுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், யூட்யூப் கிரியேட்டர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மோனலிசா என்ற பெண், கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்றுக்கொண்டு இருந்தார். அங்கு பங்கேற்றவர்கள் அவருடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்தனர். இதனால், ஒரு நாளில் அவர் செம பேமஸ் ஆகிவிட்டார்.

இந்த பிரபலத்தால், பாலிவுட் சினிமாவிலும் அவருக்கு நடிப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில், மோனலிசா கேரளாவில் ஒரு நகைக்கடையை திறந்து வைக்க அழைக்கப்பட்டார். அந்த நகைக்கடையின் உரிமையாளர் பாபி செம்மனூர், மோனலிசாவுக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.மேலும், மோனலிசாவை கேரளா வர அழைத்துவர, பாபி செம்மனூர் ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்ல, மோனலிசா தனது வாழ்க்கையில் முதல் முறையாக கேரளா வந்துள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.