தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேகர் கம்முலா. தற்போது அவர் இயக்கி வரும் படம் ‘குபேரா’. இதில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஜூன் 20ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

சமீபத்தில் ஐதராபாதில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேகர் கம்முலா, “’குபேரா’ திரைப்படத்தை இயக்குவது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தப் படத்தின் கதை தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற முன்னணி நடிகர்களை தேடியது. ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்தவுடன் நிச்சயமாக ஆச்சரியப்படுவார்கள். என் படங்களில் நான் ஒருபோதும் நேரடியாக மெசேஜ் சொல்லமாட்டேன். அதே நேரத்தில், நாட்டின் சமுதாய அமைப்பை பாதிக்காத வகையில் தான் எனது படங்கள் இருக்கும். இந்தக் கருத்தை நான் எப்போதும் மனதில் கொண்டு தான் ஒவ்வொரு கதையையும் எழுதுவேன், என்று தெரிவித்துள்ளார்.
‘குபேரா’ ஒரு சாதாரணமான படமாக இல்லாமல், வேறுபட்ட ஒரு பார்வையில் உருவாகியிருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.