நடிகர் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். பான் இந்தியா அளவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் இன்று (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் குறித்து நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் பக்கத்தில், “குபேரா பலவிதமான சிறப்புகளைக் கொண்ட படம்! தனுஷ் சார் தனது மாஸ்டர்கிளாஸ் நடிப்பை இன்னொரு முறையும் நிரூபித்துள்ளார். எப்போதும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதை மிக எளிமையாகவே திரையில் கொண்டு வருகிறார்.

சேகர் கம்முலா சார் இயக்கத்தில் நாகார்ஜுனா அவர்களை பார்ப்பது ஓர் அருமையான அனுபவமாக உள்ளது. ரஷ்மிகா, நமக்கெல்லாம் தெரியும், சேகர் கம்முலா சார் பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு வலிமையாக எழுதுவார் என்று. இந்த கதாபாத்திரம் உங்களுக்கு மறக்க முடியாத ஒன்று ஆகும்.ராக்ஸ்டார் டிஎஸ்பி சார், உங்கள் தொடர் வெற்றிப் படங்களின் பட்டியலில் இந்தப் படமும் சேரும். இது உங்கள் வெற்றியின் தொப்பியில் இன்னொரு இறக்கையாக இருக்கும்.
சூரி, அஜய், ஸ்வரூப் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தங்கள் இரத்தமும் வியர்வையும் செலுத்தி உருவாக்கியதற்கான பாராட்டுகள்! ஏசியன் சினிமாஸும் பரிசுத்த மனம் கொண்ட சேகர் கம்முலா சார் இணையும் இந்த கூட்டணி மிகவும் சிறப்பானது.சேகர் கம்முலா சார், நீங்கள் இந்த தலைமுறைக்கு ஒரு பேருத்வேகம். நானும் அந்த வரிசையில் ஒருத்தி. எனது ஆசானான நீங்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நிலையுடனும் தொடர்ந்து இப்படங்களை இயக்குங்கள் என வாழ்த்துகிறேன். இன்று அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று கூறியுள்ளார்.