Touring Talkies
100% Cinema

Friday, August 15, 2025

Touring Talkies

KPY பாலா நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனது சம்பளத்தின் பாதியை மக்களுக்கு உதவுவதற்காக செலவழிக்கும் அவர், திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி, நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது இயக்குநர் ஷெரீப்பின் புதிய படத்தின் மூலம் பாலா, கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நடிகர் வைபவ்வின் 25வது படமான ‘ரணம் – அறம் தவறேல்’ படத்தை ஷெரீப் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் அமைக்கின்றனர். ஒளிப்பதிவை பாலாஜி கே ராஜா மேற்கொள்கிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இது, அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளனர். ‘காந்தி கண்ணாடி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், தனது உருவத்தை வைத்து கேலி செய்தவர்களுக்கு எதிராக கதாநாயகனாக நிற்கும் பாலாவின் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.தற்போது ‘காந்தி கண்ணாடி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் சக்தி பிலிம்ஸ் பேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News