Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

கிங்ஸ்டன் திரைப்படம் கண்டிபாக விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் – நடிகை திவ்ய பாரதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 25வது திரைப்படம் “கிங்ஸ்டன்”. இதில் நாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும், அழகம் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடலில் நடக்கும் ஹாரர் திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரைப்பட விழாவில் பேசிய திவ்ய பாரதி, இந்த படத்தின் கதையை சொல்ல வந்தபோது, இயக்குநர் கமல் ஒரு லுக் அவுட் வீடியோ காட்டினார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். ஜிவி பிரகாஷுடன் இது எனது இரண்டாவது திரைப்படம். அவருடன் வேலை செய்த அனுபவம் சிறப்பாக இருந்தது. முதல் முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளேன். நல்லபடி செய்துள்ளேன் என்று நம்புகிறேன். ‘கிங்ஸ்டன்’ கண்டிப்பாக ஒரு விசுவல் ட்ரீட் ஆக இருக்கும்.” என கூறினார்.

- Advertisement -

Read more

Local News