Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

படம் வெளியாவதற்கு முன்பே கிங்ஸ்டன் 2 அப்டேட் கொடுத்த ஜி‌வி.பிரகாஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி இணைந்து நடித்துள்ளனர். மேலும், இது ஜி.வி. பிரகாஷ் தனது தயாரிப்பு நிறுவனமான ‘பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்’ மூலம் தயாரித்த முதல் திரைப்படமாகும். இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் கடல் பேய் திரைப்படமாக உருவாகியிருக்கும் இதன் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டாக, ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது,நாங்கள் ‘கிங்ஸ்டன்’ படத்தின் 2-ம் பாகத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கி விடுவோம் என இப்படத்தின் சமீபத்திய ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News