Touring Talkies
100% Cinema

Wednesday, May 21, 2025

Touring Talkies

வார் 2 டீஸரில் பிகினி உடையில் என்ட்ரி கொடுத்த கியாரா அத்வானி… வைரலாகும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள ‘வார் 2’ திரைப்படத்தின் அதிரடிக் காட்சிகளைக் கொண்ட டீசர் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஸ்பை யுனிவர்ஸ்’ எனப்படும் உளவுத்துறை சார்ந்த திரைப்பட வரிசையின் ஒரு பகுதியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த டீசரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை கியாரா அத்வானி, ‘‘இந்தப் படம் மூலம் எனக்கு பல விஷயங்கள் முதன்முறையாக நடந்துள்ளன. யாஷ் ராஜ் பிலிம்ஸில் இது எனது முதல் படம், முதல் அதிரடி திரைப்படம், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் முதல் முறையாக நடித்தது, இயக்குநர் அயன் முகர்ஜியுடன் முதன்முறையாக பணியாற்றியது, மேலும் முதன்முறையாக நான் பிகினி உடையில் நடித்துள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

இப்படத்தில் கியாரா அத்வானியின் கதாபாத்திரம் குறித்து தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், டீசரில் அவரின் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பார்க்காத வகையில் மிகுந்த கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பிகினி உடையில் அவர் தோன்றுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News