தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம், அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்கிடையில் அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியதால் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து த்ரிவிக்ரம், நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
இது வெங்கடேஷின் 77வது படமாக உருவாகிறது. ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ‘கே.ஜி.எப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சம்பள விவகாரம் இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.