Thursday, October 31, 2024

கே.ஜி.எப் நடிகர் யாஷ்-ன் ‘டாக்சிக்’ படத்துக்கு வந்த சிக்கல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான “கே.ஜி.எப் 1” மற்றும் “கே.ஜி.எப் 2” படங்களின் மூலம் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றவர். தற்போது, அவர் தனது 19வது படமான “டாக்சிக்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல நடிகை மற்றும் இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இந்த படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் கர்நாடகாவில் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், “டாக்சிக்” படம் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதன்படி, இப்படத்திற்காக 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஈஷ்வர் காந்த்ரே குற்றச்சாட்டு செய்துள்ளார். “டாக்சிக்” படத்தின் செட் அமைப்பதற்காக பெங்களூருவில் 100 மரங்களை வெட்டியதாகவும், மரங்களை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக, அவர் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News