நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.

‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான், பாலையா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான பி.ஏ.முகமது ரியாஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். கோழிக்கோட்டில் படப்பிடிப்பின் போது சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் அமைச்சர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.