கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ், நேற்று டிசம்பர் 18ஆம் தேதி பேபி ஜான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவுடன் கலந்து கொண்டார். இதில் அவர் கழுத்தில் தாலி அணிந்து கலந்துகொண்டது பலரின் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது.
இதோடு, கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை தினமும் பகிர்ந்து வருவது ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரோமோஷனில் கலந்து கொள்ள கீர்த்தி மேக்கப் செய்துகொண்டிருந்தபோது, களைப்பால் நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கினார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து, அதற்கு டீசல் படத்தின் பாடலை பின்னணியில் இணைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் அவர் தூங்கி விழுவது பாடலின் மெட்டுக்கு பொருத்தமாக இருப்பதால், ரசிகர்கள் “ஸ்லீப்பிங் ப்யூட்டி” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.