ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.கார்த்திக் ராஜு நாயகனாகவும், ரேவதி நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் அழுத்தமான துணை கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர்.நகரத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், தற்போது கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் தற்போது கீர்த்தனா பொதுவலும் இணைந்துள்ளார். இவரின் வருகையால் கார்த்திகை தீபம் தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
