தமிழ் சினிமாவில் “லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்” போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் முன்னணி நடிகர் கவின். தற்போது இவர், லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வயதில் சிறிய இளைஞன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும் கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஹாய் எனப்பெயரிடப்பட்டுள்ளது.