நடிகை சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் பிசியாக வலம் வருகிறார். சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்துவருகிறார். அதில் தற்போதைய ஹிந்தி படம் கவுர் Vs கோர் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு கதாபாத்திரம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கதைப்படி, இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று சூப்பர் உமன் கதாபாத்திரமாகவும், மற்றொன்று ஏஐ சக்தி கொண்ட அவதாரமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வினில் வாசு இயக்குகிறார். படத்தின் வெளியீடு இந்த ஆண்டின் இறுதியில் அல்லது வரும் ஜனவரியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.