இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது ‘பீட்சா’ திரைப்படத்தால் ரசிகர்களிடம் பிரபலமானவர். அதன் பிறகு, ‘ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கி, தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக மாறினார். தற்போது, சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக மட்டுமின்றி, தனது ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில், அவரது 16-வது தயாரிப்பு திரைப்படமாக ‘பெருசு’ உருவாகியுள்ளது. இதில், வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது, இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தைக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.இதற்கிடையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பெருசு’ திரைப்படம் மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பை படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.