தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் தபு நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது கன்னட நடிகர் துனியா விஜய் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரைப்படத் துறையில் ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்த நடிகர் விஜயகுமார், ‘துனியா’ என்ற படத்தின் மூலம் ஒரு பெரிய அடையாளத்தை பெற்றார். அதன் பின் ரசிகர்கள் அவரை ‘துனியா’ விஜய் என அழைக்கத் தொடங்கினார்கள்.
துனியா விஜய் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட மற்றும் பல விருதுகளை பெற்ற படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் துனியா விஜய் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.