Wednesday, October 16, 2024

கங்குவா ப்ரோமோஷன்கே இவ்வளவு கோடி செலவா? ஷாக்கான ரசிகர்கள்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம், 38 மொழிகளில் 3D முறையில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தை வட இந்தியாவில் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும். வட இந்தியாவில் படத்தை திரையிட 7 கோடி ரூபாயும், மொத்தம் 22 கோடி ரூபாய் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக செலவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News