நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ரோபோ சங்கர்.. ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி… போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?… உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று தெரிவித்துள்ளார்.
