71வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம். எஸ். பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றுள்ளது.

இந்த திரைப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக எம். எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும், சிறந்த திரைக்கதை எழுத்தாளராகவும் ராம் குமார் பால கிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’ படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.