சினிமாவில் தற்போது பல புதிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இந்நிலையில், ஹிந்தி மொழியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் என்ற படத்தில், சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இத்துடன், நடிகை காஜல் அகர்வாலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெறும் போது, காஜல் அகர்வால் ஹீரோயினுக்கு இணையாக கண்ணை கவரும் வகையில் கிளாமர் உடையில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இதன் பின்னர், தெலுங்கில் உருவாகி வரும் ‘கண்ணப்பா’ என்ற திரைப்படத்தில் பார்வதி தேவியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.