Friday, February 14, 2025

காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரோகிணி – வினித் தம்பதியின் மகளான லிஜோமோல், தன்னை விரும்பிய கலேஷ்-ஜ என்பவரை தவிர்த்து, அனுஷா என்ற பெண்ணை காதலிக்கிறார். தன் உணர்வுகளை தனது தாய் ரோகினியிடம் பகிர்ந்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணி, இதை ஏற்றுக்கொண்டாரா? அப்பா வினித் என்ன செய்தார்? சமூகம் இதை எப்படி பார்க்கிறது? என்பதே படத்தின் மீதி கதை.

இது, இரண்டு பெண்களுக்கிடையே ஏற்படும் காதல் கதையை பேசும் படம். அதோடு, குடும்பத்தினரிடமும், சமூகத்திடமும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நுணுக்கமாகக் காட்டுகிறது.”லென்ஸ்”, “தலைகூத்தல்” போன்ற படங்களை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தனது மூன்றாவது படமாக இதை உருவாக்கியுள்ளார். தன் பாலின காதலுக்கும் சமூக அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார்.

மலையாள நடிகை லிஜோமோல், கதையின் மையப்பாத்திரமாக அற்புதமாக நடித்துள்ளார். அனுஷா, துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரோகிணி, ஒவ்வொரு தாயின் மனநிலையை பிரதிபலிக்கிறார். வினித், சாதாரண பெற்றோரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறைகள் தென்பட்டாலும் சமூக அக்கறையுடன் விழிப்புணர்வுடன் சிறப்பாக எடுக்கப்பட்ட விதம் பாராட்டுதலுக்குரியது.

- Advertisement -

Read more

Local News