Thursday, January 23, 2025

மார்ச் 27ல் திரையில் காட்சி தரப்போகும் காளி… வீர தீர சூரன் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமாக ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் இரண்டாவது பாகம் முதலில் வெளியாக உள்ளது. இதில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிபு தமின்ஸ் இந்த படத்தை தயாரிக்க, இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். ஆக்ஷன் மற்றும் அதிரடியில் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து பிற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ‘விடாமுயற்சி’ பட வெளியீட்டின் குழப்பங்கள் காரணமாக ‘வீர தீர சூரன்’ படத்தின் வெளியீட்டிலும் சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது, இந்த திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News