சோனியா அகர்வால், ‘கிப்ட்’ என்ற படத்தில் போலீசாக நடித்துள்ளார். இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. இப்படம் குறித்து அவர் பேசுகையில், நான் போல்டான போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். யூனிஃபார்ம் இல்லாத போலீஸ் கதாபாத்திரம். பல படங்களில் ஏஞ்சல் ரோலில் நடித்துவிட்டேன், இப்போது மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன். அடுத்ததாக ஜட்ஜ், அரசியல்வாதி கதாபாத்திரங்களிலும் சில படங்களில் நடித்துவருகிறேன்.

நான் நடித்த ‘காதல் கொண்டேன்’ படம் சின்ன பட்ஜெட் படம். ஆனால் அது பெரிய வெற்றி பெற்றது. எப்போதும் கதைதான் ஜெயிக்கும். காதல் கொண்டேன் பார்ட் 2’ எடுக்க திட்டமிட்டுள்ளனர், அதைப் பற்றி என்னிடம் பேசினார்கள்.
மேலும் பேசிய அவர், எனக்கு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யும் ஆசை இருக்கிறது. ஆனால் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசை இல்லை. விஜய் கட்சியிலும் சேரும் திட்டமில்லை என்றுள்ளார்.