நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளார். ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற சட்டையில் எடுத்த ஒரு செல்ஃபியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், அவர் எடை குறைத்த ரகசியத்தைப் பகிருமாறு வேண்டிக்கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில், “இந்த பயணம் எனக்கு நியாபகமாகவும், அற்புதமாகவும் இருந்தது. சில நேரங்களில் சோதனையாகவும், சோர்வாகவும் இருந்தது. ஆனால் நான் உணர்ந்த முக்கியமான பாடம் என்னவென்றால், பொறுமையும் விடாமுயற்சியும் மிக முக்கியமானவை. மனப்பான்மையை எந்த நேரத்திலும் கைவிடாதீர்கள். உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள். வெற்றியாவது ஒருநாள் உங்களை கண்டுபிடித்து வந்தே தீரும்.
சிலர் பாதுகாப்பின்மையுடனும், சந்தேகத்துடனும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வயிற்று எரிச்சல் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எனவே அவர்களுக்கு நான் பரிந்துரைக்கக்கூடியது, ஒரு நல்ல அமிலத்தன்மை எதிர்ப்பு மருந்தைப் பருகுவது மற்றும் உழைப்பில் தீவிரமாக ஈடுபடுவதே” என பதிவிட்டுள்ளார்.