Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

400கோடியை நெருங்கிய ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா… #DEVARA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவரா பாகம்-1’ படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.  ‘தேவரா பாகம்-1’ கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.  திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

முதல் நாளில் உலகளவில் ரூ.172 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் ரூ.243 கோடியைத் தாண்டியது. 6 நாட்களில் ரூ.396 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. 500 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

- Advertisement -

Read more

Local News