Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஜூனியர் எம்.ஜி.ஆர்.-கிருஷா குரூப் நடிக்கும் புதிய படம் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Third Eye Creations நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.D.விஜய் தயாரிப்பில்,  ஜீனியர் எம்.ஜி.ஆர்., கிருஷா குரூப் இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதிய படம் உருவாகிறது.

பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார் அறிமுக இயக்குநர்  தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில்  ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் – Third Eye Creations, தயாரிப்பு – M.D.விஜய், ஒளிப்பதிவு – சரவணன்ஶ்ரீ, படத் தொகுப்பு – M.D.விஜய், திரைக்கதை, வசனம் – M.D.ஆனந்த், கதை & இயக்கம் – தமிழ் தியாகராஜன், பத்திரிகை தொடர்பு –  மணவை புவன்.

எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில்  படக் குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் படக் குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி,  இயக்குநர் தமிழ், பிக்பாஸ் டேனியல்  ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News