கே.ஜி.எப் திரைப்படங்களின் மூலம் இந்திய திரைப்பட உலகின் கவனத்தை கன்னட திரையுலகை நோக்கி திருப்ப செய்த பிரசாந்த் நீல், தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் 31ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்தது. பான் இந்தியா அளவில் உருவாகும் இந்தப் படம், ரூ. 350 கோடி மதிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத்தொகையாக தயாரிக்கப்படுகிறது.
‘என்.டி.ஆர் – 31’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் கடந்த ஜனவரியில் பூஜை நிகழ்வுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் பங்கேற்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.