மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘பணி’. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதோடு, மக்களிடையே பெரிதும் வரவேற்பும் பெற்றது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் ‘பணி 2’ மற்றும் ‘பணி 3’ ஆகிய இரண்டு பாகங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் ‘பணி 2’ திரைப்படம், முதல் பாகத்துடன் தொடர்பற்ற புதிய கதையையும், புதிய கதாப்பாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது புதிய சூழ்நிலையில் உருவாகும் திரைப்படமாக இருக்கும்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஜோஜு ஜார்ஜ் வழங்கிய தகவலில், ‘பணி 2’ திரைப்படத்திற்கு ‘டீலக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், படம் தற்போது ப்ரீ-ப்ரொடக்ஷன் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.