தெலுங்குத் திரையுலகில், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக “தேவரா” என்ற படத்தில் நடித்திருந்தார் ஜான்வி கபூர். தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக “பெத்தி” எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஹிந்தி மொழியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக “பரம் சுந்தரி” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தை துஷார் ஜெலோட்டா என்பவர் இயக்கியுள்ளார். இது ஒரு வட இந்தியா இளைஞனும், தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்ணும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்ட கதை ஆகும்.
முதலில் இப்படத்தை ஜூலை 25ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, “சாயரா” திரைப்படத்தின் காரணமாக வெளியீட்டை பின்வாங்கிய நிலையில், தற்போது ஆகஸ்ட் 29ஆம் தேதியே இப்படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர். இதனுடன் இன்று “பரம் சுந்தரி” படத்தின் முதல் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.