அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இப்படத்துக்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் அருண் மாதேஸ்வரன்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மிர்னா மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள நடிகையான மிர்னா மேனன், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனுடன், இன்னொரு கதாநாயகியாக சுதா என்பவரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.