பாலிவுட்டில் பல நடிகர்கள் மட்டுமின்றி நடிகைகளும் கூட சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையும், மது பழக்கத்தையும் தாராளமாகக் கொண்டுள்ளார்கள். இங்கு இரகசியமாக நடக்கும் விஷயங்கள் அங்கே மறைவில்லாமல் வெளிப்படையாகவே காணப்படுகிறது. தங்கள் தனிப்பட்ட பழக்கங்களையும் வெளிப்படையாகவே வெளிக்காட்டுகிறார்கள்.
பாலிவுட்டின் வசூல் நாயகனாக விளங்கும் ஷாரூக்கான் ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ ஆக இருந்தவர். ஒருநாளில் 100 சிகரெட்டுகள் வரை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். தற்போதைய ரசிகர் சந்திப்பில் அவர், தன்னால் தற்போது ஒரு சிகரெட் கூட பிடிக்க முடியாது என கூறியுள்ளார்.
அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாகவும், புகைப்பிடிப்பதை நிறுத்தினால் பிரச்சனை குறையும் எனவும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் மூச்சுத் திணறல் இன்னும் குறையவில்லை என்றும், ஆனால் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டதால் தனது உடல்நிலைக்கு பலன்கள் காணப்பெற்றுள்ளதாகவும் நீங்களும் இதை கைவிடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.