பிக்பாஸ் 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா சமீபத்தில் அளித்த பேட்டியில், தற்போது முழு கவனமும் நடிப்பில் இருக்கிறது. வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விரும்புகிறேன். கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதேசமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன் என்றுள்ளார்.
