இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமான “லோகா”, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக, டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான இப்படம், தற்போது உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.

இதற்கிடையில், நடிகர் பாசில் ஜோசப், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தவறிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தில் கடைசியாக நடித்த பாசில், “இயக்குனர் டொமினிக் அருண் லோகா படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கினார். ஆனால் வேறு படப்பணிகள் காரணமாக அதை நிராகரிக்க வேண்டி வந்தது. இப்போது அதற்காக வருந்துகிறேன்” எனக் கூறினார்.
எந்த பாத்திரம் என்று அவர் வெளிப்படுத்தவில்லை. தற்போது பாசில், தமிழில் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.