தென்னிந்திய திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட உலகிலும் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தமன்னா. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் கிளாமர் பாடல்களுக்கு நடனமாடி தனியாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவலா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருந்த தமன்னா, சில கருத்து வேறுபாடுகளால் சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தமன்னா தன்னுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். தவறுகளை மன்னிக்க முடியும், ஆனால் தன் முகத்திற்கு நேராக பொய் சொல்வதை சகித்துக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். யாராவது என் கண்முன்னே பொய் கூறி, நான் அதை நம்பும் அளவுக்கு முட்டாள் என்று நினைப்பது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது என்று தமன்னா தெரிவித்தார்.

